கூரையை பிரித்து உள்ளே குதித்த நபர்.. ! 2 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மாயம்
திருகோணமலை - நகர பகுதியில் அமைந்துள்ள பிரபல விளையாட்டு உபரகரணங்கள் விற்பனை செய்யும் நிலையமொன்றில் கூரையை பிரித்து உள்நுழைந்து ஒரு இலட்சத்துக்கும் அதிகமான பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றுமுன்தினம்(20.05.2026) இரவில் இடம்பெற்றுள்ளது.
திருட்டு சம்பவம்
திருகோணமலை நகரின் "SPORT'S ZONE" என்ற பிரபல விளையாட்டு உபகரணங்கள் விற்பனை செய்யும் கடையிலேயே இந்தத் திருட்டுச் சம்பவம் பதிவாகியுள்ளது.
நேற்று முன்தினம்(20) இரவு 11.30 மணியளவில், கடையின் கூரை மேல் ஏறி, சிவிலைக் கழற்றி உள்ளே இறங்கிய சந்தேக நபர், அங்கிருந்த கணினி மயப்படுத்தப்பட்ட பணப் பெட்டியை (Cash Counter) உடைத்து, 2 இலட்சத்து 15 ஆயிரத்திற்கும் அதிகளவான பணத்தை திருடிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து, சம்பவம் குறித்து திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதற்கமைய, திருகோணமலை தலைமையக பொலிஸார் மற்றும் அரச புலனாய்வுத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த முறைப்பட்டின் அடிப்படையில் சந்தேக நபரைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளனர்.