சினோபார்ம் தடுப்பூசி போட்டுக்கொண்டு கனடா பயணம் செய்த பெண்மணி பிரித்தானியாவில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டார்
சினோபார்ம் (Sinopharm) தடுப்பூசிகள் இரண்டையும் பெற்றுக்கொண்ட நிலையில் அனைத்து பீ.சி.ஆர் பரிசோதனைகளையும் முடித்துக்கொண்டு பிரித்தானியா வழியாக கனடா பயணம் செய்த பெண் ஒருவர் மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளார்.
திருகோணமலையைச் சேர்ந்த பெண் ஒருவரே, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து மீண்டும் கொழும்புக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடை பெற்றது.
சீனத் தயாரிப்பான சினோபார்ம்(sinopharm) தடுப்பூசியை கனடா அங்கிகரிக்காததே அதற்குக் காரணம்.
கனடாவுக்கு நுழையும் பயணிகள் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டிருக்கவேண்டும் என்பதுடன், கனடிய அரசு அங்கீகரித்த தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டவர்களை மாத்திரமே கனடா நுழைய அனுமதித்தும் வருகின்றது.
அந்த வகையில் Pfizer-BioNTech ,Moderna, AstraZeneca, Janssen/Johnson & Johnson போன்ற தடுப்பூசிகளை மாத்திரமே கனடா அங்கீகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
