கிளிநொச்சியில் போக்குவரத்து வசதியின்றி தவிக்கும் 693 குடும்பங்கள் - அதிகாரிகளிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
கிளிநொச்சி - முட்கொம்பன் கிராமத்திற்கு மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு கோரிக்கை மனுவொன்று கையளிக்கப்பட்டுள்ளது.
இந்த மனு இன்று(31.08.2026) கிளிநொச்சி அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - பூனகரி, நல்லூர் KN-59 கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட மக்களின் நலன் கருதி, மேலதிக பேருந்து சேவையை வழங்குமாறு புதிய பாதை கொத்தனி அமைப்பினால் இலங்கை போக்குவரத்துச் சபையிடம் (SLTB) உத்தியோகபூர்வ கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கிராம அலுவலர் பிரிவில் வசதி குறைந்த 693 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அங்குள்ள பாடசாலை மாணவர்கள், அரச மற்றும் தனியார் துறை ஊழியர்கள் தங்களது தினசரி பயணங்களுக்கு பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாகவும், அவர்கள் பேருந்து சேவையை நம்பியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டில் ஆடம்பர விடுதியில் பதுங்கியிருந்து நாட்டை உலுக்கிய பிரபல குற்றவாளி! அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு