விபத்தில் சிக்கி காதலன் பலி: அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் காதலி
கொழும்பு - லபுகம, தும்மோதர பிரதேசத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் யுவதியொருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இநத விபத்தில் சிக்கிய இருவரும் காதலர்கள் எனவும், கடற்கரைக்கு செல்வதற்காக நண்பர் ஒருவரிடம் மோட்டார் சைக்கிளை வாங்கி சென்றுள்ளதாகவும் பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விபத்தில் பிலியந்தலை, பமுன்வ வீதியில் வசித்து வந்த பசிது லக்ஷான் என்ற 19 வயதுடைய இளைஞனே உயிரிழந்துள்ளார்.
பொலிஸார் விசாரணை
மேலும், விபத்தில் பலத்த காயமடைந்த அம்பலாங்கொடை, கானாங்கொடை பிரதேசத்தினை சேர்ந்த 20 வயதுடைய யுவதி ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
லபுகம நோக்கி அதிவேகமாக பயணித்த வேளையில் பல்பொல பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற கால்வாய்க்குள் மோட்டார் சைக்கிள் விழுந்து விபத்துக்குள்ளானதில் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளது.
குறித்த விபத்து தொடர்பில் ஹங்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: தொகுப்பாளினி பிரியங்காவின் மானத்தை காப்பாற்றிய சிறுமி... பிரமிப்பில் நடுவர்கள் Manithan

அடேங்கப்பா முதல் நாளில் உலகம் முழுவதும் மாஸ் வசூல் வேட்டை செய்த அஜித்தின் குட் பேட் அக்லி... Cineulagam

தமிழகத்தில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள அஜித்தின் குட் பேட் அக்லி.. எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam

வெறும் வயிற்றில் சுடுநீர்+ நெய் குடிக்கிறீர்களா? 20 நிமிடத்துக்குப் பின் நிகழும் 7 மாற்றங்கள் Manithan
