புதிய சாதனை படைத்த கைலியன் எம்பாப்பே: மகிழ்ச்சியில் ரசிகர்கள்
பிரெஞ்சு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில்,PSG மற்றும் Pays de Cassel அணிக்களுக்கிடையேயான போட்டி நேற்று(23.01.2023) இரவு இடம்பெற்றது.
இந்த போட்டியில் PSG அணி 7-0 என்றம் கோல் கணக்கில் அபார வெற்றியை பதிவு செய்துள்ளது.
பிரெஞ்சு கோப்பை கால்பந்தாட்ட போட்டியில் PSG அணியின் நம்பிக்கை நட்சத்திரம் கைலியன் எம்பாப்பே பெரும் சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார்.
பிரான்சின் Lens நகரில் Stade Bollaert மைதானத்தில் இடம்பெற்ற 32 ஆவது சுற்றுப் போட்டியில் குறித்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
கைலியன் எம்பாப்பே போட்டி முழுவதும் மிகவும் தீவிரமாக விளையாடி மொத்தமாக 5 கோல்களை அடித்து சாதனை படைத்துள்ளார்.
புதிய சாதனை
போட்டி ஆரம்பமான முதல் 28 நிமிடங்கள் எந்த பரபரப்பும் இன்றி நிதானமாக நகர்ந்தது.
போட்டியின் 29 ஆவது நிமிடத்தில் முதலாவது கோலினை எம்பாப்பே பதிவு செய்தார். பின்னர் இரண்டாவது கோலினை நெய்மர் 33ம் நிமிடத்தில் பதிவு செய்ய, நெய்மர் கோல் அடித்த அடுத்த நிமிடமே மீண்டும் எம்பாப்பே மற்றொரு கோலினை அடித்தார்.
எம்பாப்பே கோல்களை விளாச ஆட்டத்தின் 40 மற்றும் 56ம் நிமிடங்களிலும் எம்பாப்பே கோல்களை விளாச, 64ம் நிமிடத்தில் Carlos Soler ஒரு கோல் அடித்தார்.
இறுதியாக PSG அணியின் ஏழாவது கோலினை 79ம் நிமிடத்தில் மீண்டும் எம்பாப்பே பதிவு செய்ய, 7-0 என்ற கோல் கணக்கில் PSG அணி அபாரமான வெற்றியை பதிவு செய்தது.
மொத்தம் 23 கோல்கள்
PSG அணியில் ஒரே போட்டியில் ஐந்து கோல்களை விளாசிய முதல் வீரராக கைலியன் எம்பாப்பே மாறியுள்ளார்.
அதுமட்டுமின்றி, PSG அணியில் இதுவரை அதிக கோல்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் எம்பாப்பே இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.
Edinson Cavani என்பவர் 200 கோல்கள் அடித்துள்ள நிலையில், அதற்கு அடுத்ததாக 196 கோல்களுடன் எம்பாப்பே இரண்டாவது இடத்தில் உள்ளார்.
மேலும், இந்த சீசனில் அனைத்து போட்டிகளிலுமாக மொத்தம் 23 கோல்களை பதிவு செய்துள்ளார் எம்பாப்பே.


தேர்தல்வாதிகளே சிந்தியுங்கள்..! 1 நாள் முன்

இளவரசர் ஹரியுடன் அந்தரங்க உறவு: 21 ஆண்டுகள் தந்தையிடம் மறைத்த பெண் தற்போது வெளியிட்டுள்ள தகவல் News Lankasri

குழந்தை நட்சத்திரம் நடிகை சாராவா இது? கையில் சிகரெட்டுடன் வெளியான புகைப்படம்! வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள் Manithan

துருக்கியில் மீண்டும் சக்தி வாய்ந்த பூகம்பம்! சீட்டு கட்டுகள் போல சரிந்த பிரம்மாண்ட கட்டிடங்களின் வீடியோ News Lankasri

விவாகரத்து பெற்று தனியாக வாழும் நடிகை மஞ்சு வாரியரின் முதல் கணவர் யார் தெரியுமா?- அவரும் நடிகரா? Cineulagam

அக்கா, தங்கையை திருமணம் செய்த நவரச நாயகன்! பல ஆண்டுகள் கழித்து இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் Manithan
