இங்கிலாந்து கவுண்டி போட்டியில் குசல் மெண்டிஸ் ஒப்பந்தம்
இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ், கவுண்டி போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்தின் நொட்டிங்ஹாம் ஷையருடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நொட்டிங்ஹாம் ஷையர் அணிக்கு விளையாடிய இந்திய விக்கெட் கீப்பர் இஷான் கிஷானுக்கு பதிலாக குசல் மெண்டிஸுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பந்து வீச்சாளர்கள் பல ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்று வந்தாலும், இலங்கை துடுப்பாட்ட வீரர் ஒருவர் முதல் முறையாக அணியில் இணைவது சிறப்பம்சமாகும்.
இங்கிலாந்து கவுண்டி போட்டி
அதன்படி, இந்த போட்டி வெற்றிகரமாக முடிவடைந்தால், கவுண்டி சாம்பியன்ஷிப்பில் விளையாடிய இலங்கை வீரர்களின் குறுகிய பட்டியலில் குசல் மெண்டிஸ் இணைவார்.
இருப்பினும், நாட்டிங்ஹாம் ஷையர் அணியோ அல்லது இலங்கை கிரிக்கெட்டோ இது தொடர்பாக உத்தியோகப் பூர்வமாக அறிவிக்கவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




