கைதிகளால் நிரம்பி வழியும் இலங்கை சிறைச்சாலைகள்
இலங்கை சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 33,095 ஆக அதிகரித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அத்தோடு, அதனால் சிறைச்சாலைகளில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி வெலிக்கடை சிறைச்சாலையில் 3,557 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.ஆனால் 750 கைதிகளே வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்க முடியும் என சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கைதிகள் அதிகரிப்பு
625 கைதிகளை அடைக்கக் கூடிய கொழும்பு மகசின் சிறையில் தற்போது 2,985 கைதிகள் உள்ளனர்.
கொழும்பு ரிமாண்ட் சிறைச்சாலையிலும் 2,426 கைதிகள் உள்ளனர், ஆனால் அந்த சிறையில் தடுத்து வைக்கக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 385 என்று தெரிவிக்கப்படுகிறது.
வெலிக்கடை மகளிர் சிறையில் தடுத்து வைக்கக்கூடிய பெண் கைதிகளின் எண்ணிக்கை 220 என்றாலும், தற்போது 561 பெண் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




