குருந்தூர்மலையில் விகாரை அமைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

Mullaitivu Sri Lanka Supreme Court of Sri Lanka Sri Lanka Police Investigation
By Vanniyan Jun 30, 2022 09:34 PM GMT
Report

முல்லைத்தீவு நீதிமன்ற கட்டளையை மீறி குருந்தூர் மலையில் அமைக்கப்பட்டவிகாரை கட்டுமான பணி தொடர்பில் பொலிஸாரிடம் விளக்கம் கோரிய வழக்கு 14.07.2022 ஆம் திகதிக்கு தவணையிடப்பட்டுள்ளது.

தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையில் கடந்த 12.06.2022 (ஞாயிறு) அன்று, 'கபோக்' கல்லினாலான புத்தர் சிலை ஒன்றினை அமைப்பதற்கும், அங்கு நீதிமன்ற கட்டளையை மீறி அமைக்கப்பட்ட விகாரையில் விசேட பௌத்த வழிபாடுகளை மேற்கொள்வதற்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தமிழர் பகுதியில் ஆர்ப்பாட்டம்

இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அப்பகுதி தமிழ் மக்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டதைத் தொடர்ந்து அந்த முயற்சிகள் கைவிடப்பட்டிருந்தன.

இந்நிலையில், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் மற்றும், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஆகியோர், 16.06.2022 அன்றைய தினம் குருந்தூர்மலை தொடர்பில் ஏற்கனவே முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கினை நகர்த்தல் பத்திரம் அனைத்து, ஏற்கனவே நீதிமன்றம் வழங்கிய கட்டளையினை மதிக்காமல் அவமதிப்புச் செய்து, அங்கு அமைக்கப்பட்ட விகாரை தொடர்பிலும், பொலிஸார் தொடர்ச்சியாக இந்த வழக்கிலே நீதிமன்றிற்கு வழங்க வேண்டிய அறிக்கைகளை வழங்காது, சட்டத்தை மீறிச் செயற்படுபவர்களுக்கு சார்பாகச் செயற்பட்டதையும் முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் மன்றில் நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்தனர்.

குருந்தூர்மலையில் விகாரை அமைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Kurundurmalai Temple Insident Order Issued Court

அந்த வகையில், குருந்தூர் மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகம் மற்றும், பொலிஸார் ஆகியோரால் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை ஆழ்ந்து அவதானித்த நீதவான், குருந்தூர் மலையில் இடம்பெற்ற விடயங்கள் தொடர்பில் விளக்கமளிப்பதற்காக வழக்குத் தொடுனரான பொலிஸாருக்கு 23.06.2022 திகதியிட்டிருந்தார்.

கால அவகாசம் கோரிய பொலிஸார்

குருந்தூர்மலை தொடர்பான AR 673/18 என்ற குறித்த வழக்கு, மீண்டும் 23.06.2022 அன்று இடம்பெற்ற போது பொலிஸார் இது தொடர்பான பூரணமான விளக்கமளிக்க முடியாத சூழ்நிலையில் இருப்பதாகவும், மேலதிகமாக தமக்கு விளக்கமளிப்பதற்கும் காலம் தேவையென கோரியிருந்தனர்.

இதனடிப்படையில், வழக்கு விசாரணைகள் இன்றைய தினத்துக்கு தவணையிடப்பட்டிருந்தது.

குருந்தூர்மலையில் விகாரை அமைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Kurundurmalai Temple Insident Order Issued Court

இன்று (30) முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா முன்னிலையில் குறித்த வழக்கு விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட போது குருந்தூர்மலை ஆதிசிவன் ஐயனார் ஆலய நிர்வாகத்தினர் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி அன்ரன் புனிதநாயகம், முல்லைத்தீவு மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத்தின் சட்டத்தரணிகள் கெங்காதரன்,பரஞ்சோதி,தனஞ்சயன் உள்ளிட்ட பலர் முன்னிலையாகியிருந்தனர்.

வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

இதேவேளை, பொலிஸ் தரப்பில் விளக்கமளிப்பதற்காக முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பொறுப்பான உதவி பொலிஸ் அத்தியட்சகர் லசந்த விதானகே முல்லைத்தீவு மாவட்ட தலைமை பொலிஸ் பரிசோதகர் அமரசிங்க உள்ளிட்டவர்கள் மன்றுக்கு விளக்கமளித்துள்ளனர்.

குருந்தூர்மலையில் விகாரை அமைக்கப்பட்ட விவகாரம்! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு | Kurundurmalai Temple Insident Order Issued Court

இதனை தொடர்ந்து  இரண்டு தரப்பு வாதங்கள், சமர்ப்பணங்களை அவதானித்த நீதவான், கட்டளைக்காக இந்த வழக்கினை 14-07-2022 ஆம் திகதிக்கு திகதியிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US