குருந்தூர் மலை விவகாரம் தொடர்பில் வெட்கித் தலைகுனிய வேண்டும்: நீதி அமைச்சர் சீற்றம்
நீதித்துறைக்குச் சவால் விடும் வகையிலும் குருந்தூர்மலையைச் சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல் என நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.
குருந்தூர்மலையில் நேற்றுமுன்தினம் வழிபடச் சென்ற தமிழ் மக்கள், பிக்குகள் - சிங்கள மக்கள் மற்றும் பொலிஸாரால் இடையூறு விளைவிக்கப்பட்டு திருப்பியனுப்பப்பட்டமை தொடர்பில் கொழும்பு ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்கே அவர் மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், இது வெட்கித் தலைகுனிய வேண்டிய செயற்பாடு. இந்தப் பிரச்சினைக்குப் பின்னால் இருக்கும் குழுவினரை அடையாளம் காணவேண்டும்.
வெட்கித் தலைகுனிய வேண்டிய செயற்பாடு
அந்தக் குழுதான் தமிழ் மக்களையும் - பௌத்த சிங்கள மக்களையும் முட்டி மோதவிட்டு வேடிக்கை பார்க்க எண்ணுகின்றது.
இந்தப் பிரச்சினைக்கு விரைந்து ஒரு தீர்வு எட்டப்படவேண்டும் என்பதில் நீதி அமைச்சர் என்ற ரீதியில் நான் உறுதியாகவுள்ளேன்.
அதேவேளையில் நீதித்துறைக்குச் சவால்விடும் வகையிலும் குருந்தூர்மலையை சிலர் பயன்படுத்த முற்படுகின்றனர். இது நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் செயல். அனைத்துக்கும் விரைந்து இணக்கமான சூழலை ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

அஜித் குமார் மரண வழக்கில் கைதான 5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு News Lankasri
