குருந்தூர்மலை பௌத்தர்களின் சொத்து: விதுர விக்ரமநாயக்க ஆதங்கம்
குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களின் சொத்து, அங்குள்ள விகாரையை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்ரமநாயக்க தெரிவித்துள்ளார்.
அங்கு பௌத்தர்கள் சென்று வழிபடுவதை எவரும் தடுக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குருந்தூர்மலை தொடர்பில் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைகளை தொல்பொருள்
திணைக்களப் பணிப்பாளர் நாயகம் சரிவரப் பின்பற்றாது உதாசீனம்
செய்திருக்கின்றார் என முல்லைத்தீவு நீதிமன்றம் நேற்றுக் கட்டளை
வழங்கியுள்ளது.
குருந்தூர்மலை விகாரை
அவர் மேலும் தெரிவிக்கையில், குருந்தூர்மலை தொடர்பாகவோ அல்லது அங்குள்ள விகாரை குறித்தோ முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்து வருகின்றன கட்டளைகள் - தீர்ப்புக்கள் தொடர்பில் என்னால் பதிலளிக்க முடியாது.
ஆனால், குருந்தூர்மலை சிங்கள பௌத்தர்களின் சொத்து. அங்குள்ள விகாரையை எவரும் கேள்விக்குட்படுத்த முடியாது.
அங்கு பௌத்தர்கள் சென்று வழிபடுவதை எவரும் தடுக்க முடியாது. இந்த நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன்.
குருந்தூர்மலையை வைத்து அரசியல் செய்ய வேண்டிய அவசியம் சிங்கள பௌத்தர்களுக்குக் கிடையாது. ஆனால், குருந்தூர்மலையை வைத்து அரசியல் செய்வதை தமிழ் அரசியல்வாதிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri

ஆனந்தியின் கர்ப்பத்திற்கு மகேஷ் தான் காரணமா... பஞ்சாயத்தில் பரபரப்பின் உச்சம், சிங்கப்பெண்ணே சீரியல் Cineulagam
