குருந்தூர் மலைப்பகுதியில் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு! - சார்ள்ஸ் எம்.பி. நேரில் விஜயம்
குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினரால் கடந்த வாரம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதனுக்கு அப்பகுதி மக்கள் எடுத்துக்கூறியதன் பிரகாரம் இன்று அப்பகுதிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் விஜயம் செய்து தொல்பொருள் திணைக்களத்தினர் சுவீகரித்துள்ள காணிகளைப் பார்வையிட்டுள்ளார்.

மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
இதன்போது உடனடியாக சம்பந்தப்பட்ட அமைச்சரைத் தொடர்புகொண்ட சார்ள்ஸ் எம்.பி., புதிதாக தொல்பொருள் திணைக்களத்தினர் மக்களின் விவசாய நிலங்களைச் சுவீகரித்துள்ளனர் எனவும், இதனால் இப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரியப்படுத்தியுள்ளார்.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இப்படியான செயற்பாடுகள் தொடர்ந்தும் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் எனவும் அமைச்சருக்குச் சார்ள்ஸ் எம்.பி. தெளிவுபடுத்தியுள்ளார்.
இது தொடர்பாக உடனடியாகத் தான் விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் நடவடிக்கை
எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்துள்ளார்.
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan