குருந்தூர் மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து பொலிஸார் வெளியிட்ட தகவல்
குருந்தூர் மலையில் குழப்பத்தை தூண்டிய குற்றச்சாட்டில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில், குருந்தூர் மலையை அடிப்படையாக வைத்து உருவாகும் குழப்பநிலைக்கு காரணமான நபரை புலனாய்வு பிரிவினர் அடையாளம் கண்டுள்ளனர் என தெரிவித்தார்.
இது தொடர்பில் பதிலளிக்கும் போதே பொலிஸ் பேச்சாளர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
முறைப்பாடுகள் இல்லை
குருந்தூர் மலையில் குழப்பத்தை தூண்டியவர் குறித்து எந்தவித முறைப்பாடுகளும் இல்லாததால் இது தொடர்பில் எவரையும் கைது செய்ய முடியாத நிலையில் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு முறைப்பாடுகள் அவசியம். முறைப்பாடுகள் இல்லாமல் விசாரணைகளை முன்னெடுக்கவோ கைது செய்யவோ முடியாது என கூறியுள்ளார்.
எனினும் குருந்தூர் மலையை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற சிறிய சம்பவங்கள் குறித்து அரசியல் தலையீடுகள் இல்லாமல் விசாரணைகள் இடம்பெறுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |