திருமணமான இரண்டு மாதங்களில் கொடூரமாக வெட்டி இளைஞர் கொலை
குருநாகல் மாவட்டம், பன்னலை பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
நேற்றிரவு இடம்பெற்ற இந்த கொடூர சம்பவத்தில் ரிதிகமை பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய இளைஞர் உயிரிழந்துள்ளார்.
யுவதியை காதலித்து திருமணம்
சம்பவத்தில் உயிரிழந்த இளைஞர் பன்னலை பிரதேசத்தை சேர்ந்த யுவதியை காதலித்து, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே திருமணம் செய்துள்ளார்.

திருமணத்தின் பின்னர் அவர் பன்னலையில் உள்ள மனைவியின் வீட்டிலேயே வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், நேற்று இரவு முச்சக்கர வண்டியில் வந்த அடையாளம் தெரியாத மூவர், மேற்படி இளைஞர் மீது கொடூரமான முறையில் வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.
பொலிஸார் தீவிர விசாரணை
இதன்போது கடும் காயங்களுக்குள்ளான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறு அல்லது காதல் விவகாரம் காரணமாக இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வெடிபொருட்கள் இல்லை... RAF ஃபேர்ஃபோர்டுக்கு அருகில் மூன்று வாகனங்கள் தொடர்பில் பொலிசார் News Lankasri