குருக்கள்மடம் அகழ்வாய்வுப் பணிகள் - நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
குருக்கள்மடம் பகுதியில் விடுதலைப் புலிகளால் முஸ்லீம் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பகுதியானது மீண்டும் மண் படிவ மாதிரி பரிசோதனைகளுக்காக அகழ்வாய்வு நடவடிக்கை மேற்கொள்ளவிருந்த நிலையில் மற்றுமொரு திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
நேற்று தொடக்கம் ஒரு வாரம் ஒதுக்கப்பட்ட நிலையில் ஆய்வினை மேற்கொள்ளும் நிபுனர்களின் வேண்டுகோளுக்கமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகள் எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம் திகதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில்
முன்னமே கடந்த பங்குனி 30ஆம் திகதி தொடக்கம் குறித்த பகுதியில் அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு எத்தகு தடயங்களும் கிடைக்கப்பெறாத நிலையில் அப்பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

அதனைத் தொடர்ந்து பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் குறித்த பகுதில் மேலும் சில இடங்களைச் சுட்டிக்காடி தங்கள் சொந்த செலவில் ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்வதற்காக அனுமதி கோரி வழக்குத் தொடரப்பட்டிருந்த நிலையில் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குறித்த பகுதி ஸ்கேன் செய்யப்பட்டதுடன். குறித்த அறிக்கையின் பிரகாரம் நேற்றைய தினம் தொடக்கம் ஒரு வாரத்திற்கு அகழ்வாய்வு மேற்கொள்வதற்கான நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் நேற்றைய தினம் அகழ்வாய்வினை மேற்கொள்ளும் தடயவியல் நிபுனர்களின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த அகழ்வாய்வுப் பணிகளை எதிர்வரும் ஐப்பசி மாதம் 06ம் திகதி தொடக்கம் முன்னெடுப்பதற்கு நீதிமன்றம் மீண்டும் உத்தரவு பிறப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.