குப்பிழான் கன்னிமார் கெளரி அம்பாள் ஆலயத்தில் இடம்பெற்ற மகா கும்பாபிஷேகம்!
குப்பிழான் வீரமனை கன்னிமார் கெளரி அம்பாள் ஆலய மகா கும்பாபிஷேகம்-2025 நேற்று ஞாயிற்றுக்கிழமை (13.07.2025) சுப வேளையில் சிறப்புறவும், பக்திபூர்வமாகவும் இடம்பெற்றது.
குப்பிழானைச் சேர்ந்த புலம்பெயர் அடியவர்கள் மற்றும் கிராமத்து அடியவர்களின் நிதிப் பங்களிப்பில் இவ் ஆலயம் தற்போது புதுப் பொலிவு பெற்றுத் திகழ்கின்றது.
மகா கும்பாபிஷேகம்
புன்னாலைக்கட்டுவனைச் சேர்ந்த சிவஸ்ரீ.கிருஷ்ண பிரணவக் குருக்களைப் பிரதிஷ்டா பிரதம குருவாகக் கொண்டு ஆலயப் பிரதமகுரு சிவஸ்ரீ சி.கிருஷ்ணசாமிக் குருக்களின் நெறிப்படுத்துதலில் மகா கும்பாபிஷேகம் நடந்தேறியிருந்தது.
இவ் ஆலயத்தின் மகா கும்பாபிஷேகக் கிரியைகள் கடந்த வியாழக்கிழமை (10.07.2025) அதிகாலை-05.30 மணியளவில் பிரம்ம முகூர்த்த வேளையில் ஆரம்பமானது.
மேலும், சனிக்கிழமை (12.07.2025) காலை-09.20 மணியளவில் அடியவர்கள் எண்ணெய்க் காப்புச் சாத்தும் வைபவம் ஆரம்பமாகி மாலை-04 மணி வரை இடம்பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.









ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 44 நிமிடங்கள் முன்

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
