நுவரெலியா ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா
நுவரெலியா மாவட்டத்தில் அமைந்துள்ள டயகம மேற்கு 03ஆம் பிரிவில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி சிறப்பாக நடைபெறவுள்ளது.
இந்த மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஏப்ரல் 23 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கம்பாரம்பம் நிகழ்வு ஆரம்பமாகிவுள்ளது.
இதனைத் தொடர்ந்து ஏப்ரல் 28 ஆம் திகதி மாலை 7.00 மணிக்கு எண்ணெய்காப்பு நிகழ்வு நடைபெறவுள்ளது.
சிறப்பு நிகழ்வுகள்
எதிர்வரும் ஏப்ரல் 29 ஆம் திகதி காலை 9.01 மணி முதல் 10.10 மணி வரை உள்ள சுப வேளையில் மேளதாள இசை முழங்க பக்தர்கள் அரோகரா கோச மிட மகா கும்பாபிஷேக நிகழ்வு நடைபெறவுள்ளதாக ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விழாவை முன்னிட்டு பல்வேறு யாகங்கள், பூஜைகள் மற்றும் ஆன்மீக நிகழ்ச்சிகள் தொடர்ந்தும் நடைபெறவுள்ளன.
மேலும், இறுதிநாளான ஏப்ரல் 29ஆம் திகதி பொதுமக்களுக்கு அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.
கும்பாபிசேக சமய கிரிகைளை இலங்கையில் புகழ்பூத்த சிவாச்சாரியார்கள் மற்றும் குருக்களினால் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த வழிப்பாட்டில் கலந்து கொண்டு அம்மனின் ஆசீர்வாத்தை பெற்றுக்கொள்ளுமாறு ஆலய நிர்வாகம் பக்தர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.