நீதிமன்றத்தை நாடியுள்ள முன்னணி போதைப்பொருள் கடத்தல்காரர்
முன்னணி ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளி மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரரான குடு சலிந்து என்று அழைக்கப்படும் சலிந்து மல்சிக குணரத்ன, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ஒரு ரிட் மனுவை தாக்கல் செய்துள்ளார்.
குற்றப் புலனாய்வுத் துறையினர், தம்மை கைது செய்வதற்காக விடுத்துள்ள இன்டர்போல் சிவப்பு அறிவிப்பை இடைநிறுத்தக் கோரி இந்த ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விசாரணை
குடு சலிந்துவின் சட்டத்தரணிகள்; மூலம் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவை நேற்றுமுன்தினம்(7) மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் பரிசீலித்தனர்.

இந்தநிலையில் மனுவைத் தொடர நீதியரசர்கள் அனுமதியளித்தனர் இதன்படி 2026 ஜனவரி 30 அன்று மனு மீண்டும் அழைக்கப்படவுள்ளது.
இதேவேளை ஜனவரி மாதம் விசாரணையின் போது ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதாக சட்டமா அதிபர் திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்தது.
போதைப்பொருள் கடத்தல்காரரான "குடு சலிந்து" தற்போது தலைமறைவாகி வெளிநாட்டில் வசித்து வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam