குடு சலிந்துவின் உதவியாளர் பியூமாவின் விளக்கமறியல் நீடிப்பு
பிரபல பாதாள உலகக்கும்பல் புள்ளியான பியூமா என்றழைக்கப்படும் பியூமி ஹஸ்திக என்பவரின் விளக்கமறியல் உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
பாதாள உலக கும்பலைச் சேர்ந்த 'பியூமா' என்று அழைக்கப்படும் பியூமி ஹஸ்திக, பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் பாதாள உலக கும்பல் தலைவனுமான 'குடு சலிந்து' என்று அழைக்கப்படும் சலிந்து மல்ஷிக என்பவரின் முக்கிய உதவியாளர் ஒருவர் ஆவார்.
இலங்கையில் தப்பியோடி தலைமறைவாக இருந்த நிலையில், துபாயில் வைத்து கைது செய்யப்பட்ட பியூமா, கடந்த 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவு
அதன் பின்னர், பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், நேற்றைய தினம்(01) அவர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, எதிர்வரும் 14 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலி உத்தரவிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |