இலங்கையில் மேற்கொள்ளப்படும் வெளிநாட்டவர்களின் மோசடி! பாதிக்கப்படும் பலர்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் சீனர்களின் இணையவழி மோசடிகள் காரணமாக பெரும்பாலும் வெளிநாட்டவர்களே பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
அண்மைக்காலமாக சீனப்பிரஜைகள் இலங்கையில் விசா இன்றி தங்கியிருத்தல், இணையவழி மோசடிகள் தொடர்பில் கூடுதலான அளவில் கைது செய்யப்படுகின்றனர்.
கடந்த ஆண்டும் சுமார் 200இற்கும் மேற்பட்ட சீனர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தனர்.
பேச்சுவார்த்தைகள்
இந்நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம், குறித்த சீனப்பிரஜைகளின் இணைய மோசடி பெரும்பாலும் வெளிநாட்டவர்களை இலக்கு வைத்தே நடத்தப்படுவது தெரியவந்துள்ளது.

இலங்கையர்கள் அவற்றில் மிகச் சொற்பமான அளவிலேயே பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ள சீனப்பிரஜைகளை தமது நாட்டுக்கு நாடு கடத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைகளை இலங்கையில் உள்ள சீனத்தூதரகம் முன்னெடுத்துள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam