கனடா ராப் பாடகருக்கு சீன நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு
சீனாவில் கனடாவை சேர்ந்த பிரபல ராப் பாடகருக்கு பாலியல் வழக்கில் 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிரிஸ் வூ என்கிற 32 வயதான ராப் பாடகர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் 3 பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
இறுதி விசாரணை
தலைநகர் பீஜிங்கில் உள்ள சாயோயாங் மாவட்ட நீதிமன்றில் நேற்று இந்த வழக்கு இறுதி விசாரணைக்கு எடுத்துகொள்ளப்பட்டுள்ளது.
கிரிஸ் வூ மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தெரிவித்த நீதிபதி அவரை குற்றவாளியாக அறிவித்துள்ளார்.
தொடர்ந்து இந்த வழக்கில் கிரிஸ் வூக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.
இவ்விடயம் குறித்து கனடா உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.


மீண்டும் பதின்மூன்றா....! 19 மணி நேரம் முன்

தொகுப்பாளினி டிடியின் மறுமணம் பற்றி முதன்முறையாக கூறிய அவரது அக்கா பிரியதர்ஷினி- என்ன கூறினார் தெரியுமா? Cineulagam
