இலங்கை கிரிக்கட் அணி வீரர்கள் சிலருக்கு கோவிட் தொற்று
இலங்கை கிரிக்கட் அணியின் சில வீரர்களுக்கு கோவிட்-19 நோய்த் தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கை கிரிக்கட் அணி தற்பொழுது பங்களாதேஷிற்கு கிரிக்கட் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.
மிகவும் பாதுகாப்பான முறையில் இலங்கை வீரர்களும் பயிற்றுவிப்பாளர்களும் பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நிலையில், நேற்று இரவு எடுக்கப்பட்ட பீ.சீ.ஆர் பரிசோதனைகளில் சிலருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
இலங்கையின் வேகப் பந்து வீச்சாளர்களான இசுறு உதான, ஷிரான் பெர்னாண்டோ மற்றும் வேகப் பந்து பயிற்றுவிப்பாளர் சமிந்த வாஸ் ஆகியோருக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
பங்களாதேஷ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் சர்வதேசப் போட்டி இன்று ஆரம்பமாக உள்ள நிலையில் இந்த கோவிட் தொற்று உறுதிகள் பதிவாகியுள்ளன.
இதனால் பங்களாதேஷ் கிரிக்கட் சுற்றுப் பயணத்தின் போட்டிகள் தொடர்பில் சந்தேக நிலைமை உருவாகியுள்ளது.