அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் தேவஸ்தான வசந்த தேர்த்திருவிழா (video)
கொழும்பு 13 , ஜம்பட்டா வீதி , அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் முத்துமாரியம்மன் தேவஸ்தான வசந்த மண்டப சிறப்பு பூஜை மற்றும் இரதோற்சவ வீதி உலா நடைபெற்றுள்ளது.
கடந்த 13ஆம் திகதி கொடியேற்றத்துடன் பூஜைகள் ஆரம்பமாகிய நிலையில் இன்று (30.01.2023) தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இந்த தேர்த்திருவிழாவில் பெருந்திரளான மக்கள் பக்தியோடு கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிலையில் நாளைய தினம் (31.01.2023) பாற்குட பவனியோடு தீர்த்தோற்சவமும் கொடியிறக்கமும் நடைபெறவுள்ளது.
மேலும் எதிர்வரும் முதலாம் திகதி வைரவர் மடையோடு தேர்த்திருவிழா இனிதே நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.