மாணவி உயிர் மாய்ப்பு: ஆசிரியருக்கு எதிரான நடவடிக்கை குறித்து பேராசிரியர் கூறியுள்ள விடயம்
கொழும்பின் முன்னணி மகளிர் கல்லூரி மாணவியின் உயிர் மாய்ப்புக்கு கரரணம் என சந்தேகிக்கப்படும் ஆசிரியரை இடமாற்றம் செய்வது மட்டுமே தீர்வாகாது என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிறுவர் மருத்துவத் துறையின் ஓய்வு பெற்ற பேராசிரியர் ஹரேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
குற்றவியல் குற்றம் செய்ததாகக் கூறப்படும் ஆசிரியருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை என்பது தீர்வல்ல, மாறாக குற்றவியல் விசாரணை மற்றும் வழக்குத் தொடுப்பதே தீர்வாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், கல்வி அமைச்சுக்கு ஒழுக்காற்று விசாரணைகளை நடத்த எந்த அதிகாரமும் இல்லை.
குற்றம்சாட்டப்பட்டவரிடம் விசாரணை
சிறுவர் துஸ்பிரயோகம் தண்டனைச் சட்டத்தின் கீழ் வருவதால், பொலிஸ் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு ஆணையகம் என்பன குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்து அதற்கேற்ப விசாரணை செய்வது கட்டாயமாகும்.
பாலியல் துஸ்பிரயோகம் என்பது தண்டனைச் சட்டத்தின் கீழ் வருகிறது. எனவே, தண்டனைச் சட்டத்தின் கீழ் வரும் எந்த குற்றமும் சமூகத்திற்கு எதிரான செயல்.
ஆகவே அவற்றை நீதிமன்றங்களுக்கு வெளியே தீர்க்க முடியாது என கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மஞ்சள் கயிறு, நெற்றியில் குங்குமம்.. நம்ம இனியாவா இது? தனுஷ் பாடலுக்கு வைப் செய்யும் காட்சி Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
