திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் விரட்டிச் சென்ற நபர் ஆற்றில் குதித்து பலி
திருடன் என நினைத்து பிரதேசவாசிகள் விரட்டிச் சென்ற நபர் ஒருவர், காலி கொஸ்கொட ஆற்றில் குதித்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த நபர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் அவர் சுமார் 28 வயது மதிக்கத்தக்கவர் எனவும் கொஸ்கொட பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்த நபர் வைத்திருந்த பை ஒன்றில் இரண்டு திருப்புளிகள்(screwdriver) இருந்துள்ளன. இந்த நபரை சிலர் விரட்டி வந்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து தப்பிக்க அவர் ஆற்றில் குதித்துள்ளார்.
ஆற்றில் குதித்த நபர் காணாமல் போன நிலையில், கடற்படை சுழியோடிகளின் உதவியுடன் சடலத்தை மீட்டதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பலப்பிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் கொஸ்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 11 மணி நேரம் முன்
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri
முத்துவேல், சக்திவேல் உதவியால் சிறையிலிருந்து வெளிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.. புரோமோ இதோ Cineulagam