வேலைக்குச் சென்ற பெண்ணை கழுத்தறுத்து படுகொலை செய்த மர்ம நபர்! அதிகாலையில் நேர்ந்த பரிதாபம்
கொஸ்கம பகுதியில் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்ட நிலையில் பெண் ஒருவர் பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று காலை குறித்தப் பெண் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொஸ்கம பகுதியில் உள்ள ரப்பர் தொழிற்சாலைக்கு அருகில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், இந்த படுகொலையை செய்த கொலையாளி தொடர்பில் தகவல்கள் எதும் இல்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் விசாரணை
அவிஸ்ஸாவெல்ல - புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய இரு பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
படுகொலை செய்யப்பட்ட பெண் ரப்பர் தொழிற்சாலையில் பணி புரிவதாகவும், இன்று அதிகாலை வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது அவர் கூரிய ஆயுதம் ஒன்றினால் கழுத்தறுத்து படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் எவரும் கைது செய்யப்படவில்லை என்றும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.





சன் டிவியில் 3 சீரியல்களின் சங்கமம் நடக்கப்போகிறது... எந்தெந்த தொடர்கள் தெரியுமா, ரசிகர்களுக்கு குட் நியூஸ் Cineulagam

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
