அதிகாலையில் நடந்த பயங்கரம்! சிறுமி உள்ளிட்ட மூவர் மீது துப்பாக்கிச் சூடு
கொஸ்கம - கடுவெல்ல பகுதியில் இன்று(06) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் மூவர் படுகாயமடைந்துள்ளனர்.
பெண் ஒருவர் உள்ளிட்ட மூவரே இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்துள்ளனர்.
தப்பிச் சென்ற துப்பாக்கிதாரிகள்
குறித்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் அவர்களை நோக்கிச் சுட்டுவிட்டு தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தின்போது, அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 30 வயது தாயும் அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
படுகாயமடைந்தவர்கள் அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டமைக்கான காரணம் மற்றும் சந்தேகநபர்கள் தொடர்பான விபரங்கள் எதுவும் இதுவரை வெளிவரவில்லை.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Saroja devi death: பழம்பெரும் நடிகை சரோஜா தேவி 87 வயதில் காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam

கோபத்தின் உச்சத்தில் குணசேகரன்.. ஜனனி போட்ட மாஸ்டர் பிளான்! பரபரப்பான கட்டத்தில் எதிர்நீச்சல் சீரியல் Cineulagam

ஆதி குணசேகரனுக்கு இரண்டாவது அடி.. பெண்கள் அதிரடி! எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் அப்டேட் Cineulagam
