இடிந்து விழும் நிலையில் மூதூர் கொள்ளனாச்சிப் பாலம்
திருகோணமலை மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தாஹா நகர் கொள்ளனாச்சிப் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1976ஆம் ஆண்டு கட்டப்பட்ட இப்பாலம் சுமார் 50 வருடங்கள் பழமையானது. 20 மீட்டர் நீளம் கொண்ட இப்பாலம் தற்போது தளர்ந்துள்ளது.
பாலத்தின் பல இடங்களில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதனால் பாலம் எந்த நேரத்திலும் இடிந்து விழும் அபாயத்தில் உள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
மக்கள் கோரிக்கை
இந்தப் பாலத்தின் ஊடாக அரச அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள், அன்றாட தொழிலாளர்கள் மற்றும் கடற்றொழிலாளர்களும் பயணிக்கின்றனர்.
இந்நிலையில், குறித்த மூதூர் தாஹா நகர் கொள்ளனாச்சி பாலத்தை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் செலுத்தி மீள் புனரமைத்து தருமாறு அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

துப்பாக்கி சூட்டுக்கு உள்ளான சஞ்சீவவை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாத பாதுகாப்பு தரப்பினர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |