பங்களாதேஷ் நாடாளுமன்ற உறுப்பினர் இந்தியாவில் படுகொலை
இந்தியாவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பங்களாதேஷின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது அன்வருல் அசீம் அன்வர்(anwarul-azim-anar) படுகொலை செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த 12 ஆம் திகதி மருத்துவ சிகிச்சைக்காக கொல்கத்தா சென்ற நிலையில் கடந்த 14ஆம் திகதி முதல் முகமது அன்வருல் அசீம் அன்வரை காணவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் கட்ட விசாரணை
எம்.பி.யான அன்வருல் அசீமை தொடர்பு கொள்ள இயலாத நிலையில் காணப்பட்டதையடுத்து கொல்கத்தா பொலிஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்நிலையில் கொல்கத்தா நியூ டவுன் பகுதியில் அன்வருல் அசீம் நேற்று சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்
பொலிஸார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் அவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
இத்தகவலை மேற்கு வங்க சிஐடி பொலிஸார் உறுதி செய்துள்ளதுடன் இதுதொடர்பாக படுகொலை வழக்கு பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |