ஐதராபாத்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்ற கொல்கத்தா அணி
ஐ.பி.எல். தொடரின் 15ஆவது லீக் போட்டியில் சன்ரைசஸ் ஐதராபாத்(SRH) அணியை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றுள்ளது.
கொல்கத்தா(KKR) ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று(3) இந்த போட்டி நடைபெற்றது.
கொல்கத்தா அணி
இதில் கொல்கத்தா, ஐதராபாத் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ஐதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 200 ஓட்டங்களை பெற்றது.
வெங்கடேஷ் ஐயர் 29 பந்தில் 60 ஓட்டங்களும், ரகுவன்ஷி 32 பந்தில் 50 ஓட்டங்களும் ,ரகானே 38 ஓட்டங்களும், ரிங்கு சிங் 32 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஐதராபாத் அணி
இதையடுத்து, 201ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் அனைவரும் கொல்கத்த அணியின் பந்துவீச்சை தாங்காது ஆட்டமிழந்தனர்.
கிளாசன் 33 ஓட்டங்களும், கமிந்து மெண்டிஸ் 27 ஓட்டங்களும் எடுத்தனர். இறுதியில், ஐதராபாத் 16.4 ஓவரில் 120 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.
இதன்மூலம் 80 ஓட்டகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அபார வெற்றி பெற்றது. நடப்பு தொடரில் கொல்கத்தா பெறும் 2ஆவது வெற்றி இதுவாகும்.
ஐதராபாத் அணி பெற்ற 3ஆவது தோல்வி இதுவாகும். கொல்கத்தா சார்பில் வருண் சக்கரவர்த்தி, வைபவ் அரோரா தலா 3 விக்கெட்டும், ஆண்ட்ரே ரசல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |