சொந்த மைதானத்தில் படுதோல்வியடைந்த சென்னை அணி
ஐபிஎல் 2025 சீசனின் 25ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(KKR) அணி அபாரமாக வெற்றிப்பெற்றுள்ளது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்(CSK) மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின.
சென்னை அணி
நாணயசுழற்சியில் வெற்றிப் பெற்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 103 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. முதல் 6 ஓவர்களில் சிஎஸ்கே 2 விக்கெட் இழந்து 31 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
சிஎஸ்கே அணி சார்பில் ஷிவம் துபே 31 ஓட்டங்களும், விஜய் சங்கர் 29 ஓட்டங்களும் எடுத்தனர்.
கொல்கத்தா அணி சார்பில் சுனில் நரைன் 3 விக்கெட்டும், ஹர்ஷித் ரானா, வருண் சக்கரவர்த்தி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
கொல்கத்தா அணி
இதையடுத்து, 104 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா களமிறங்கியது. டி காக், சுனில் நரைன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். டிகாக் 23 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
சுனில் நரைன் அதிரடியாக ஆடி 18 பந்தில் 5 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 44 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், கொல்கத்தா 10.1 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 107 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |