நிறைவுப்பகுதியில் கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு! இதுவரை 52 மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியிலிருந்து இதுவரை 52 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வாய்வின், பத்தாம் நாளான நேற்றைய (15) அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் பத்தாம் நாள் அகழ்வுப் பணிகள் நேற்று இடம்பெற்றது. இன்றுடன் அனேகமாக இந்த மனிதப் புதைகுழியில் இருந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுவதும் மீட்கப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகள்
ஒட்டுமொத்தமாக இதுவரை 52 மனித எலும்புக்கூட்டு தொகுதிகள் மீட்க்கப்பட்டுள்ளதுடன் இன்று துப்பாக்கிச் சன்னம் மற்றும் சிறப்புக் கோர்வையும் சான்றுப்பொருட்களாக மீட்க்கப்பட்டுள்ளன.
அடுத்துவரும் நாட்களில் இந்த புதைகுழி தொடர்பான சில நீதிமன்ற நடவடிக்கைகள் தொடரும் என வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்குமுன்னர் இடம்பெற்ற இரண்டு கட்ட அகழ்வாய்வுகளின்போது 40மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளில் இதுவரை மீட்க்கப்பட்ட 12 மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகளுடன் மொத்தம் 52 மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலதிக தகவல் - தவசீலன்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் ஆனந்தி கழுத்தில் தாலி கட்டிய அன்பு... சிங்கப்பெண்ணே பரபரப்பு புரொமோ Cineulagam

The Fantastic Four: First Steps மூன்று நாட்களில் செய்துள்ள வசூல்.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
