கொச்சிக்கடை தேவாலயத்தில் வழிபட சென்ற நபரின் மோசமான செயல்! வெளியான சிசிடிவி காணொளி
கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் பெறுமதி மிக்க மடிக்கனிணிகள் மற்றும் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களை நபர் ஒருவர் திருடிச் சென்றுள்ளார்.
நேற்றையதினம் மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தேவாலயத்தில் வழிபடுவதற்கு வருகைத் தந்த மற்றுமொரு நபரின் பெறுமதி மிக்கப் பொருட்களே இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
வெளியான சிசிடிவி காணொளி..
மேலும், சம்பவம் தொடர்பான சிசிடிவி காணொளி தற்போது வெளியாகியுள்ளது.
இதன்போது, இரண்டு மடிக் கனிணிகள், ஒரு மதர் போர்ட், பெறுமதிமிக்க ஒரு தொலைபேசி, கடவுச்சீட்டு, பிறப்புச் சான்றிதழ் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள், பணப்பை உள்ளிட்டவை இவ்வாறு திருடிச் செல்லப்பட்டுள்ளன.
ஆலயத்தில் வழிபாடுகளில் கலந்து கொள்பவர் போல வந்த சந்தேகநபரே இவ்வாறு பொருட்களை திருடிச் சென்றுள்ளார்.
குறித்த பொருட்களின் உரிமையாளர், தனது பையினை இருக்கையில் வைத்துவிட்டு வழிபடுவதற்காக பலிபீடத்தை நோக்கிச் சென்ற போது இதனை அவதானித்த சந்தேக நபர் பொருட்களைத் திருடிச் சென்றுள்ளார்.
சிசிடிவி காணொளியின் துணையுடன் சந்தேநபர் திருடிச் செல்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபரை அடையாளம் காண பொதுமக்களின் உதவியை பொருட்களின் உரிமையாளர் கோரி நிற்கிறார்.

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
