சாராவை தூக்கி சென்ற மர்ம நபர்! சஹ்ரானின் மனைவி கொடுத்த நேரடி வாக்குமூலம்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் சூத்திரதாரிகளுள் ஒருவரான சாரா என்னும் புலஸ்தினியை ஒருவர் தூக்கி செல்வதை தான் கண்டதாக, தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரானின் மனைவி ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் அளித்த சாட்சியத்தில் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சாரா என்னும் புலஸ்தினி
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தற்கொலைக்குண்டுத்தாக்குதலுடன் சம்பந்தப்பட்ட வலையமைப்பு இந்த அரசாங்கத்துக்குள் இன்னும் செயற்பட்டு வருகிறது.
சாய்ந்தமருது பிரதேசத்தில் வீடொன்றில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் அங்கிருந்தவர்களில் ஒரு சிலர் உயிர் தப்பியிருந்தனர்.
அவர்களில் சஹ்ரானின் மனைவி ஒருவர். அவர் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியமளிக்கும்போது, சாராவை ஒருவர் துக்கிச்செல்வதைகண்டதாக குறிப்பிட்டிருக்கிறார்.
அப்படியானால் சாராவை யார் தூக்கிச்சென்றனர் என்பதை அறிந்துகொள்ள வேண்டும் என்றால், மேஜர் சுபசிங்கவிடம் கேளுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

SBI Special FD திட்டத்தில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால்.., 3 ஆண்டுகளில் திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

மூன்றாம் உலகப்போர் வெடித்தால்... பிரான்சுடன் அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ளும் பிரித்தானியா News Lankasri
