கொச்சிகடை தேவாலயம் மீது தாக்குதல் நடத்தியவரின் தந்தை சகல குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல்களுடன் தொடர்புடைய தற்கொலைதாரி ஒருவரின் தந்தையை நிதிமன்றம் குற்றச்சாட்டுக்களிலிருந்து விடுதலை செய்துள்ளது.
கொழும்பு கொச்சிக்டை புனித அந்தோனியார் தேவாலயத்தின் மீது அலவ்தீன் அஹமட் முவான் என்ற நபர் தற்கொலைத் தாக்குதல் நடத்தியிருந்தார்.
தற்கொலைத் தாக்குதல்தாரியான அஹமட் முவானின் தந்தையை கொழும்பு பிரதான நீதவான் புத்திக்க ஸ்ரீ ராகல, சகல குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் தற்கொலைதரி அஹமட் முவானின் தந்தையான அஹமட் லெப்பே அலவ்தீனை புலனாய்வுப் பிரிவினர் ஒன்றரை ஆண்டுகளுக்கு மேல் தடுத்து வைத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குறித்த நபருக்கு எதிராக சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களிலிருந்தும் விடுதலை செய்வதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது என தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 18 மணி நேரம் முன்

அதிரடியில் இறங்கிய ஆனந்தி.. உண்மையை எப்படி கண்டுபிடித்தார் பாருங்க! சிங்கப்பெண்ணே நாளைய ப்ரோமோ Cineulagam

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
