காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பயணிகள் படகுச்சேவை கட்டணம் மீண்டும் குறைப்பு
காங்கேசன்துறை-நாகப்பட்டினம் பணிகள் படகுச் சேவையின் இருவழிக்கட்டணம் மீண்டும் குறைக்கப்பட்டுள்ளதுடன் பயணிகள் எடுத்துச்செல்லும் பொதிகளின் நிறை அளவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அநடத நிறுவனத் தலைவர் தெரிவித்துள்ளார்.
நிறுவனத்தின் தலைவர் நேற்றையதினம்(2) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் இதனை குறிப்பிட்டுள்ளார்.
படகுச்சேவை
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் சேவை ஆரம்பிக்கும்போது 36 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்ட இருவழிக்கட்டணம் பின்னர் 30 ஆயிரம் ரூபாவாக குறைக்கப்பட்டது. தற்போது மீண்டும் அது குறைக்கப்பட்டு 28 ஆயிரம் ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பயணிகள் எடுத்துச் செல்லும் பயணப்பொதியின் அளவும் 10 கிலோவிலிருந்து 22 கிலோவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சுற்றுலா மேம்பாட்டிற்காக இலங்கையிலிருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்காக 7 வகையான புதிய சுற்றுலாப் பொதிகளும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கட்டணம்
இதில் தங்குமிடம், உள்ளூர் போக்குவரத்து ,இருவழி படகு போக்குவரத்து கட்டணம் அடங்கலாக 4 நாட்கள் தங்குவதற்கான கட்டணம் ஆகக்குறைந்தது 70 ஆயிரம் ரூபாவிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
அத்துடன் அடுத்தமாதம் காங்கேசன்துறையிலிருந்து காலையில் புறப்படக்கூடியதான புதிய சேவையும் ஆரம்பிக்கப்படவுள்ளது.
எனவே இச்சேவைகளை பயன்படுத்தி இரு நாடுகளையும் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் பயனடையுமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

விருது வாங்க சென்ற இடத்தில் அஜித் மகனுக்கு அடித்த லக்.. குடியரசு தலைவருடன் லீக்கான புகைப்படம் Manithan
