கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்..! சத்தியலிங்கம் பாய்ச்சல் - ரவிகரனும் கடும் எதிர்ப்பு

Parliament of Sri Lanka Bimal Rathnayake Thurairajah Raviharan Pathmanathan Sathiyalingam
By Rakesh Jan 25, 2026 10:10 AM GMT
Report

2011ஆம் ஆண்டு கிவுல் ஓயாத் திட்டம் தயாரித்ததிலிருந்து இன்று வரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுகின்றன. இந்தப் போக்கு ஏன் என்று கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் நாடாளுமன்றத் தொகுதியில் நேற்று நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் சீற்றத்துடன் கேள்வி எழுப்பினார் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம்.

இந்தக் கூட்டத்தில் பங்குபற்றிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் து.ரவிகரனும் இந்தத் திட்டத்துக்குக் கடும் எதிர்ப்பை வெளியிட்டார்.

கிவுல் ஓயா நீர்ப்பாசனத் திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் நடைபெற்றுள்ளது.

இது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் ஊடகங்களுக்கு விசேட செய்திக்குறிப்பு ஒன்றை அனுப்பியுள்ளார்.

ப.சத்தியலிங்கம் கூறும் விடயம்

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:- "கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பான விசேட கூட்டமொன்று இன்று (நேற்று) நாடாளுமன்ற வளாகத்தில் துறைசார் அமைச்சர் கே.டி.லால்காந்த தலைமையில் இடம்பெற்றது. இக்கூட்டத்தில் அமைச்சர் பிமல் ரத்நாயக்க மற்றும் துறைசார் அமைச்சின் பிரதி அமைச்சர்கள், கூட்டுறவு பிரதி அமைச்சர் உபாலி சமரசிங்க, அமைச்சின் அதிகாரிகள் மற்றும் மகாவலி - எல் வலய விவசாய அமைப்புகளின் பிரதிநிகள் எனப் பலர் கலந்துகொண்டிருந்தனர்.

வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

வீட்டுக்கு வந்த பெண்ணால் வைத்தியருக்கு காத்திருந்த அதிர்ச்சி! தென்னிலங்கையில் நடந்த சம்பவம்

இவ்வாறான ஒருகூட்டம் நடைபெற இருப்பதாகவும் அதில் கலந்துகொள்ளுமாறும் ஒருசில தினங்களுக்கு முன் பிறிதொரு நிகழ்வில் தெரிவித்த அமைச்சர் கே.டி.லால்காந்த அதற்கான அழைப்பு எங்களுக்கு அனுப்பப்படும் என அப்போது தெரிவித்தார். ஆனால் இன்றைய (நேற்றைய) கூட்டம் தொடர்பாக எமக்கு அறிவிக்கப்படாத நிலையில் நானும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களும் கலந்துகொண்டோம்.

கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்..! சத்தியலிங்கம் பாய்ச்சல் - ரவிகரனும் கடும் எதிர்ப்பு | Kivul Oya Thittam Sathyalingam Raviharan

அமைச்சர் லால்காந்த இதன்போது எமது கருத்தை அறிய ஆவலாக உள்ளார் எனத் தெரிவித்தார். மகாவலி - எல் வலய குடியேற்றம் தொடர்பான விடயங்களிலும் அங்கு இப்போது நடைபெறும் கிவுல் ஓயா நீர்ப்பாசன திட்டம் தொடர்பிலும் கசப்பான கடந்தகால அனுபவங்களும் கரிசனையும் எமக்கு உள்ளன என்பதை அச்சபைக்கு தெரியப்படுத்தினோம். 2011ஆம் ஆண்டு கிவுல் ஓயாத் திட்டம் தயாரித்ததிலிருந்து இன்றுவரை வெளிப்படைத்தன்மை இல்லாமல் மிக இரகசியமாகவே அனைத்து ஏற்பாடுகளும் நடைபெறுவதாக சபைக்கு சுட்டிக்காட்டினோம்.

இவ்வாறே செட்டிகுளத்தில் நடைபெறும் கீழ்மல்வத்து ஓயா நீர்ப்பாசனத் திட்டம் இரகசியமாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட மக்களுக்குத் தெரியாமல், அத்திட்டத்துக்கான காரியாலயத்தை இரகசியமாக அனுராதபுரத்தில் அமைத்து வேலைகளை முன்னெடுத்தமை தொடர்பிலும் தெரியப்படுத்தினோம். இறுதியாக நடைபெற்ற வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான திட்ட முன்மொழிவை எமது மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் ஆராய்ந்து பொருத்தமான அனுமதியை பெறவேண்டும் என்று நான் முன்மொழிந்திருந்தேன்.

அவ்வாறு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதை அமைச்சருக்குச் சுட்டிக்காட்டினேன். மகாவலி - எல் வலய அபிவிருத்தி என்ற பெயரில் அங்கிருந்த பூர்வீக குடிமக்களின் காணிகள் அபகரிக்கப்பட்டு 1983இல் குடியேற்றம் செய்யப்பட்டாலும் இதுவரை மகாவலி நீர் அங்கு கொண்டுவரப்படவில்லை. கிவுல் ஓயாத் திட்ட முன்மொழிவில் மகாவலி நீரை கொண்டுவரும் சாத்தியக்கூறுகள் இல்லாததாலேயே மாற்றீடாக இந்தத் திட்டம் கொண்டுவரப்படுவதாக இருப்பதையும் மேற்படி திட்ட நோக்கத்தில் புதிதாக அபிவிருத்தி செய்யும் இடத்தில் புதிய குடியேற்றவாசிகள் குடியமர்த்தப்படுவார்கள் என்று குறிப்பிடப்பட்டதையும் தெளிவுபடுத்துமாறு கோரினோம்.

கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்..! சத்தியலிங்கம் பாய்ச்சல் - ரவிகரனும் கடும் எதிர்ப்பு | Kivul Oya Thittam Sathyalingam Raviharan

எமது கருத்தைக் கேட்டறிந்த அமைச்சர் உட்பட்ட குழுவினர் பின்வரும் உறுதிமொழிகளை எமக்கு வழங்கினர்:-

* திட்டப் பிரதேசத்துடன் தொடர்புடைய அனைத்து மக்கள் பிரதிநிகளுடனும் பிரதேச மக்களுடனும் பெப்ரவரி மாத முற்பகுதியில் தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் நடைபெறும்.

* புதிய குடியேற்றவாசிகள் வெளிமாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்படமாட்டர்கள். சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடாது திட்டத்தைத் தயாரித்து நடைமுறைப்படுத்தும் தறுவாயில் எமது தலையீட்டையடுத்து தெளிவுபடுத்தல் செய்ய ஆயத்தமாகும் செயற்பாடு ஆபத்தானது, கண்டிக்கப்பட வேண்டியது.

மேற்படி திட்டத்தால் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மற்றும் சவால்கள் தொடர்பாக அனைத்துத் தரப்பினருடனும் ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்கும் செயற்பாட்டில் அனைவரும் இணைந்து செயற்பட நடவடிக்கை எடுத்துள்ளோம். அனைவரையும் இந்தச் செயற்பாட்டில் இணைந்து பணியாற்ற முன்வருமாறு வேண்டுகின்றேன்." - என்று சத்தியலிங்கத்தின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகையே குழப்பிய அந்த ஒற்றை பென்குயின்! வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புகைப்படம்

உலகையே குழப்பிய அந்த ஒற்றை பென்குயின்! வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள புகைப்படம்

ரவிகரன் தெரிவிக்கும் விடயம்

ரவிகரன் கருத்து இது தொடர்பில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் கூறியவை வருமாறு:- "தமிழ் மக்களுக்குப் பல்வறேு வழிகளிலும் பாதகமாக இருக்கின்ற கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான கலந்துரையாடல் விவசாய அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும் சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க ஆகியோரின் பிரசன்னத்துடன் இடம்பெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பில் தெளிவூட்டுகின்ற வகையிலும், திட்டம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் கருத்துக்களைக் கேட்டறியும் கலந்துரையாடலாக இது அமைந்திருந்தது. இந்த கிவுல் ஓயாத் திட்டத்தின் பாதகத் தன்மைகள் தொடர்பில் எடுத்துக்கூறி நானும், வைத்தியர் சத்தியலிங்கமும் இந்தத் திட்டத்தை மிகக் கடுமையாக எதிர்த்தோம்.

கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்..! சத்தியலிங்கம் பாய்ச்சல் - ரவிகரனும் கடும் எதிர்ப்பு | Kivul Oya Thittam Sathyalingam Raviharan

இந்தத் திட்டம் செயற்படுத்தப்பட்டால் தமிழர்களது இனப்பரம்பல் கோலம் மற்றியமைக்கப்படுவதுடன், தமிழர்களது பூர்வீகத் தொல்லியல் சான்றுகளும் அழிக்கப்படும் என்பதைச் சுட்டிக்காட்டினோம். இது தவிர சுற்றுச்சூழல் பாதிப்பு நிலைகள் ஏற்படும் அபாய நிலைகள் இருப்பதையும் இதன்போது மிகத் தெளிவாகச் சுட்டிக்காட்டியிருந்தோம்.

இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் கிவுல் ஓயா குறிப்பாக இந்தக் கிவுல் ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தைச் செயற்படுத்தினால் வவுனியா வடக்கில் இருக்கின்ற தமிழ் மக்களின் பூர்வீக இராமன்குளம், கொட்டோடைக்குளம், ஒயாமடுக்குளம், வெள்ளான்குளம், பெரியகட்டுக்குளம், பனிக்கல்மடுக்குளம், சன்னமுற்றமடுக்குளம், கம்மாஞ்சிக்குளம், குறிஞ்சாக்குளம், புலிக்குட்டிக்குளம், திரிவைச்சகுளம் முதலான சிறிய நீர்ப்பாசனக்குளங்களும், அவற்றின் கீழான வயல்காணிகளும், வெடிவைச்சகல்லு குளத்தின்கீழ்வரும் வயல்காணிகள் பகுதியளவிலும், நாவலர்பாம், கல்லாற்றுக்குளம், ஈச்சன்குளம், கூழாங்குளம் வயற்காணிகளும் வவுனியா வடக்கிலுள்ள பழந்தமிழ் கிராமங்களான காட்டுப்பூவரசங்குளம் கிராமம், காஞ்சூரமோட்டை கிராமம், மருதோடைக் கிராமத்தின் ஒருபகுதி போன்ற தமிழ் மக்களின் பூர்வீகக் குளங்களும், வயல்நிலங்களும், கிராமங்களும் நீரேந்துப்பகுதிகளுக்குள் மூழ்கிப்போகும் என்பதைச் சுட்டிக்காட்டினோம்.

இவ்வாறாக தமிழ் மக்களை அவர்களுடைய பூர்வீக இடங்களிலிருந்து வெளியேற்றிவிட்டு, குடியேற்றப்பட்ட 6 ஆயிரம் பெரும்பான்மையினக் குடும்பங்களை வலுப்படுத்தி தமிழ் மக்களின் இனப்பரம்பல் கோலத்தை மாற்றியமைக்கும் இவ்வாறான திட்டங்களை ஒருபோதும் எம்மால் அனுமதிக்க முடியாது என்று எம்மால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கருத்திலெடுக்கப்படாத சுற்றுச்சூழல்பாதிப்பு இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்துக்காக வவுனியா பெரிய கட்டுக்குளம் பகுதியிலுள்ள பாரிய ஒதுக்கக் காடுகள் அழிக்கப்படவுள்ளன. அத்தோடு கொக்குத்தொடுவாயிலுள்ள கிரிபன்வெவ என்று பெயர் மாற்றப்பட்டுள்ள தமிழர்களின் பூர்வீக ஆமையன் குளத்துக்கு நீரை நகர்த்துகின்றபோது 2500 ஹெக்டெயர் காடுகள் அழிந்துவிடும் என்று சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்..! சத்தியலிங்கம் பாய்ச்சல் - ரவிகரனும் கடும் எதிர்ப்பு | Kivul Oya Thittam Sathyalingam Raviharan

அதேவேளை, இந்தத் திட்டத்தை அண்மித்த புதிய குடியேற்றங்களுக்காக 1,500 ஹெக்டெயர் அளவிலான வாழ்விடத்தை வனஜீவராசிகள் இழப்பதால் மனித – யானை மோதல்கள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளுக்கிடையிலான மோதல்கள் தீவிரமடையும் என்று வனஜீவராசிகள் திணைக்களம் கவலை தெரிவித்துள்ளதாக இந்தக் கிவுல் ஓயாத் திட்டத்தின் சுற்றுச் சூழல் பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தால் மேம்படுத்தப்படவுள்ள விவசாய நிலங்களைப் பாதுகாப்பதற்காக மின்சார வேலிகள் அமைக்கப்பட்டால் காட்டுயானைகள் மற்றும் ஏனைய வனஜீவராசிகளின் நடமாட்டம் கேள்விக்குறியாகும். இதனால் வனஜீவராசிகளின் உயிரவாழ்வு தொடர்பான பிரச்சினை உருவாகும். காட்டு யானை உள்ளிட்ட வனஜீவராசிகள் புதிய வழித்தடங்களை நாடினால் மின்சார வேலிகளை மேலும் 50 கிலோமீற்றருக்கு அதிகரிக்கும் நிலை ஏற்படும் எனவும், எனவே அதற்கு மேலதிக நிதி தேவைப்படும் எனவும் வன ஜீவராசிகள் திணைக்களம் கரிசனை வெளியிட்டுள்ளது.

எதிர்காலத்தில் ஒதுக்கக் காடுகளை அழிக்கும் நில மேலும் தீவிரமடைந்தால் நீண்டகாலத்தில் மழைவீழ்ச்சி குறைவடைவதற்கான நிலைமை ஏற்படலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. குறித்த கிவுல் ஓயாத் திட்டப் பகுதியில் மொத்தம் 88 தாவர இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 2 தாவர இனங்கள் தேசிய அளவில் அச்சுறுத்தலுக்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், முக்கியமான 7 தாவர இனங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அதேவேளை, இந்தப் பகுதியில் 214 விலங்கு இனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 14 விலங்கு இனங்கள் உள்ளூரைச் சேர்ந்தவையாகக் காணப்படுகின்றன.

மேலும் இங்கு காணப்படும் 4 விலங்கு இனங்கள் உலக அளவில் ஆபத்துக்கு உள்ளானவையாகக் காணப்படுவதுடன், 8 விலங்கு இனங்கள் தேசிய அளவில் அழிந்து வருபவையாகவும் உள்ளன. அதேவேளை பறவைகளில் புலம்பெயர்ந்த இனங்களும் இந்தப் பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆகவே சுற்றுச்சூழல் பாதுகாப்புத் தொடர்பில் அவதானம் செலுத்திகின்றபோது இந்தத் திட்டத்தின் நேர்மைமறையான முடிவுகளை விடவும் எதிர்மறையான தாக்கங்களே அதிகமாக இருக்கின்றன என்பதையும் இதன்போது சுட்டிக்காட்டியிருந்தோம்.

கிவுல் ஓயாத் திட்டம்; இரகசிய நகர்வு ஏன்..! சத்தியலிங்கம் பாய்ச்சல் - ரவிகரனும் கடும் எதிர்ப்பு | Kivul Oya Thittam Sathyalingam Raviharan

வன்னிக்கும் தமிழர்களுக்குமான வரலாற்றுத் தொடர்பு விழுங்கப்படும் மேலும் கிவுல் ஓயாத் திட்டத்தைச் செயற்படுத்தினால் நீரேந்துப் பகுதிக்குள் 47 தொல்லியல் இடங்கள் மூழ்கிப் போகும் அபாய நிலை ஏற்படும். தமிழர்களின் பூர்வீகத்தைப் பறைசாற்றும் வன்னி இராச்சியத்துடன் தொடர்புடைய வரலாற்றுத் தொன்மங்களே இவ்வாறு கிவுல் ஓயாத் திட்டத்தில் மூழ்கிப் போகும் நிலையில் காணப்படுகின்றன என்பதும் இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது.

எனவே, தமிழர்களுக்கும் வன்னிக்கும் இடையிலான நீண்டகால வரலாற்றுத் தொடர்பை நீரில் மூழ்கச் செய்கின்ற இந்தத் திட்டத்தை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்ற எமது கருத்துக்களை இதன்போது தெரிவித்திருந்தோம். இந்நிலையில் குறித்த திட்டத்தால் பாதிப்புக்கள் எவையும் இடம்பெறாது என்று தெரிவித்த மகாவலி அதிகார சபையினர், கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பாக வவுனியாவில் தெளிவூட்டல் கலந்துரையாடல் ஒன்றை நடத்துவர் எனத் தெரிவித்தனர்." என்றார்.

அமெரிக்க இராணுவத்தில் இணையவுள்ள அபாயகரமான F-47 போர் விமானம்! ட்ரம்பின் அடுத்த இலக்கு

அமெரிக்க இராணுவத்தில் இணையவுள்ள அபாயகரமான F-47 போர் விமானம்! ட்ரம்பின் அடுத்த இலக்கு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW  
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US