கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் மாபெரும் போராட்டம்
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுங்கேணியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
நெடுங்கேணி பேருந்து நிலையத்தின் முன்றலில் ஆரம்பமான குறித்தப் போராட்டம் தற்போது பேரணியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்தப் பேரணியில் பெருமளவான மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து ஆர்ப்பாட்டகாரர்கள் அங்கிருந்து நெடுங்கேணி பிரதேச செயலகம் வரை ஊர்வலமாக கோசங்களை எழுப்பியவாறு சென்றிருந்தனர்.
அங்கும் மக்கள் ஒன்று கூடி தமது எதிர்ப்பு போராட்டத்தை நடத்தியதுடன், வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் மகஜரொன்றையும் ஜனாதிபதிக்கு அனுப்புவதற்காக வழங்கியிருந்தனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவான தமிழ் மக்கள் கலந்து கொண்டு அரசாங்கத்தின் திட்டமிட்ட நில அபகரிப்பு எதிராக குரல் கொடுத்திருந்தனர்.
தமிழ் தேசிய மக்கள் முன்னனி தவிர்ந்த தமிழ் தேசியக் கட்சிகள் மற்றும் பொது அமைப்புக்கள் இணைந்து ஏற்பாடு செய்த குறித்த ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பின்களான சி.சிறிதரன், இரா.சாணக்கியன், து.ரவிகரன், ப.சத்தியலிங்கம், செல்வம் அடைக்கலநாதன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், மு.சந்திரகுமார், சாந்தி சிறிஸ்கந்தராஜா, தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் துளசி, பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பல நூற்றக்கணக்கானோர் பங்கேற்றிருந்தனர்.
முத்து மீது தவறு இல்லை என தெரிந்ததும் ரவி செய்த செயல், நீது அடித்தது யார் தெரியுமா?... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
ஜேர்மனியில் புலம்பெயர்ந்தோரால் ரயில் முன் தள்ளிவிடப்பட்ட இளம்பெண்: விவரங்கள் வெளியாகின News Lankasri