கிண்ணியா நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு
கிண்ணியா நகரசபை மற்றும் பிரதேசசபை ஆகிய உள்ளூராட்சி நிறுவனங்களுக்காக தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களுக்கான வரவேற்பு நிகழ்வு இன்று (29) கிண்ணியா உலமா சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, கிண்ணியா கிளையினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வு, அதன் தலைவர், சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஆர். நசார் மௌலவி தலைமையில் நடைபெற்றது.
அபிவிருத்தி
இதன் போது, அவர் உரையாற்றுகையில், நாங்கள் பிரிந்திருந்து, எதிர் அரசியல் செய்வதால், எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்ய முடியாது. சமூக நீதியை, ஏற்படுத்த வேண்டும் என்பதை இலக்காக கொண்டு, அரசாங்கம் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.
எனவே அரசாங்கத்தோடு ஒத்துழைத்து, எமது பிரதேசத்தை அபிவிருத்தி செய்வதற்கு, திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும்.
ஒத்துழைப்பு
கிண்ணியா நகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றினுடைய அபிவிருத்திக்காக, உங்களால் மேற்கொள்ளப்படுகின்ற, அனைத்து முயற்சிகளுக்கும் கிண்ணியா உலாமா சபை பூரண ஒத்துழைப்பு வழங்குவதோடு, ஊழியர்களாக பணியாற்றுவதற்கும் நாங்கள் ஆயத்தமாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.







நல்லூர் கந்தசுவாமி கோவில் 18 ஆம் நாள் திருவிழா




