அபாய நிலையில் கிண்ணியா பிரதேச கடலோரங்கள்: பொதுமக்கள் விசனம் (Photos)
திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா கடற்கரையோரப் பகுதிகள் பெரிதும் கடலரிப்புக்கு உட்பட்டு வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா தொடக்கம் மூதூர் கடற்கரையோரம் வரைக்குமான பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டு நிலப்பகுதிகள் கடலுக்குள் செல்கின்றது.
கிண்ணியா பாலம் தொடங்கி மூதூர் செல்லும் பிரதான வீதி கடற்கரையை அண்மித்த கடல் ஓர நிலப் பரப்புக்கள் வழமையை விட தற்போது அதிகமாக கடல் அரிப்பால் கடலுக்குள் உள்வாங்கப்பட்டுள்ளது.
இதணை இவ்வாறே பராமுகமாக விட்டுவிட்டால் எதிர்காலத்தில் போக்குவரத்து செய்வதற்கு கூட வீதி இல்லாமல் போய்விடும். சில இடங்களில் பிரதான வீதியைக்கூட அண்மித்துவிட்டது.
சில இடங்களில் பாரிய கற்களை இட்டுள்ள போதிலும் கடலரிப்பு தாக்கம் காரணமாக கற்கள் சிதறி காணப்படுகின்றன.
கடல் ஒரங்களில் நட்டிய சீமெந்து தூண்கள் கூட அரிக்கப்பட்டு கம்பிகள் மட்டும்தான் தென்படுகின்றது. இதனை இவ்வாறு பாரா முகமாக விடுவதால் பாரிய விளைவுகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
இந் நிலையில், கடலரிப்பு நடவடிக்கைகளை தடுப்பதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதற்கான கடலரிப்புச் சுவரை ஏற்படுத்தி கடலோரத்தையும், கடலோர நிலப்பரப்பையும் பாதுகாக்குமாறு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
