ஈச்சத்தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகை
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஈச்சத்தீவு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையமொன்று முற்றுகையிடப்பட்ட நிலையில், சந்தேகநபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் அதே பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் எனவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினருக்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலையடுத்து கிண்ணியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த பெர்ணாந்துவின் ஆலோசனைக்கு அமையக் கிண்ணியா பொலிஸார் கசிப்பு உற்பத்தி நிலையத்தினை சுற்றி வளைத்து சந்தேகநபரொருவரையும் கைது செய்து தடுப்புக்காவலில் வைத்து புலன் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அக்கசிப்பு உற்பத்தி நிலையத்தில் கசிப்பு மற்றும் கோடாத் திரவமும் அடங்கிய 7 பரல்கள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவற்றில் சுமார் 3 இலட்சத்து 60 மில்லி லீட்டர் கசிப்பு இருந்ததாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
கோவிட் அச்சம் காரணமாக மதுபானசாலைகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளதனால் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனைகள் கிராமப்புறங்களில் அதிகரித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.









வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

தீபாவளிக்கு சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ், கலைஞர் டிவியில் ஒளிபரப்பாகும் படங்கள்.. லிஸ்ட் இதோ Cineulagam
