கிண்ணியாவில் கலாசார மண்டபம் - சந்தை வளாகம் அமைப்பது தொடர்பிலான கலந்துரையாடல்
கிண்ணியா நகரத்திற்கான கலாசார மண்டபம் மற்றும் சந்தை வளாகம் அமைப்பதற்கான சாத்தியம் குறித்து கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா நகர சபையின் தவிசாளர் எம்.எம்.மஹ்தியின் தலைமையில் நகர சபை மண்டபத்தில் நேற்று (08) நடைபெற்றுள்ளது.
அதற்கு சாத்தியப்பாடான பல காணிகள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.
சாத்தியப்பாட்டு அறிக்கை
அக்காணிகளை ஞாயிறு மாலை 4:30 மணிக்கு கள விஜயம் செய்து பார்வையிட்டு சாத்தியப்பாட்டு அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டு அதற்காக 9 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது.
இவ்வறிக்கை தயாரிக்கப்பட்ட பின்னர் கட்டடத்தின் தோற்றம் அதற்கான கட்டமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு முன் கொண்டு செல்வதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் எம்.எச்.கனி, வலய கல்வி பணிப்பாளர் இஸட்.எம்.எம்.முனவ்வரா நளீம், பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம்.அஜீத், பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், பொறியியலாளர்கள், வைத்தியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |








தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

விஜய்யின் ‘குஷி’ ரீரிலீஸ் தியேட்டர் எல்லாம் காத்து வாங்குதா.. பிரபல தியேட்டர் உரிமையாளர் ட்ரோலுக்கு பதில் Cineulagam

சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam
