சிறுமி ஒருவரை தவறான நடத்தைக்குட்படுத்திய நபர் கைது
தருமபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் 12 வயதுடைய சிறுமியை தவறான நடத்தைக்குட்படுத்தியததாக குற்றம் சாட்டப்பட்டு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
46 வயது உடைய குறித்த சந்தேக நபர் தர்மபுரம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அப்பகுதி கிராம சேவகர் வழங்கிய தகவலுக்கமைய அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ பரிசோதனை
மேலும், கைது செய்யப்பட்டவர் கிளிநொச்சி நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் திகதி 20ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காக கிளிநொச்சி பொது வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை தருமபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri