ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய திரைப்படம்! சீமான் கடும் கண்டனம்
ஈழத்தமிழர்களை இழிவுபடுத்தும் தென்னிந்திய திரைப்படமான கிங்டம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவது நிறுத்தப்படவில்லை எனில் திரையரங்குகளை முற்றுகையிடுவோம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய நடிகர் விஜய் விஜய் தேவரகொண்டா நடிப்பில் சமீபத்தில் வெளியான தெலுங்கு மொழி திரைப்படமான கிங்டம் திரைப்படத்தில், யாழ்ப்பாணத் தமிழர்கள் மோசமானவர்கள் போன்றும் அவர்கள் இந்தியர்களை தவறாக நடத்துவது போன்றும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இதற்கு தனது கண்டனத்தை வெளியிட்ட சீமான் மேலும் கூறுகையில்,
“சமீபத்தில் வெளியான கிங்டம் திரைப்படத்தில் ஈழத்தமிழர்கள் குற்றப்பரம்பரை போல சித்தரிக்கப்பட்டதை கேள்விப்பட்டு அதிர்ச்சியடைந்தேன்.
கண்ணியம், ஒழுக்கம் மற்றும் அறம்
கருத்துச் சுதந்திர போர்வையில் தமிழ்த் தேசிய வரலாற்றை திருபுபடுத்தி அதனை தவறாக சித்தரிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. மலையகத் தமிழர்களை ஈழத்தமிழர்கள் ஒடுக்கினார்களென அத்திரைப்படத்தில் காட்டப்படுவது வரலாற்றுத்திரிபு.
வரலாற்றில் ஒருபோதும் நடக்காத ஒன்றை திரைப்படமாக்கி ஈழத்தமிழர்களை மோசமாக சித்தரிப்பது கடும் கண்டனத்துக்குரியது.
உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் தமிழீழ விடுதலைப் புலிகள், கண்ணியத்தையும் ஒழுக்கத்தையும் அறநெறியையும் பின்பற்றிய ஒரு இயக்கமாக இருந்தனர்.
போர் முடியும் தருவாயில் கூட, பழிவாங்கும் நோக்கத்தோடு சிங்கள மக்களின் குடியிருப்புக்கள் மீது தாக்குதல் நடத்தாமல் அறத்தை பின்பற்றிய வீரமறவர்கள் அவர்கள்.
'திரையரங்குகளை முற்றுகையிடுவோம்'
ஆனால், எந்தவொரு போர் நெறியையும் பின்பற்றாத சிங்கள இராணுவம், ஏறத்தாழ 2 இலட்சம் தமிழர்களை கொன்றுக் குவித்தது.
போர் நிறைவடைந்து 15 வருடங்கள் கடந்த போதிலும் தமிழினத்திற்கான நீதியை பெற்றுத்தர எந்தவொரு சர்வதேச அமைப்பும் முன்வரவில்லை.
எமது இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதியை பல்வேறு முயற்சிகளுக்கு பின்னர் உலகரங்கிற்கு கொண்டு செல்லும் இந்த வேளையில், எமது இனத்தை தவறாக சித்தரிக்கும் கிங்டம் திரைப்படம் தமிழகத்தில் திரையிடப்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.
இவ்வாறு அனுமதிக்கப்படும் பட்சத்தில் தமிழகத்தின் திரையரங்குகளை முற்றுகையிடுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





மீனாவிற்கு புடவை எல்லாம் வாங்கிகொடுத்து செல்லம் என கொஞ்சம் விஜயா.. சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன தான் நடக்கிறது? Cineulagam

Ehirneechal: மருத்துவமனையில் உயிருக்கு போராடும் ஈஸ்வரி- மருத்துவர்கள் சொன்ன அதிர்ச்சி தகவல் Manithan

என் வாழ்க்கையை அழித்தவர் புடின்..! நேரடியாக தாக்கிய ரகசிய மகள்: ரஷ்யாவுக்கு எதிராக மாறியது ஏன்? News Lankasri

சரிகமப சீசன் 5 போட்டியாளர் பாடிக்கொண்டிருக்கும் போதே அவரது வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகமான அரங்கம் Cineulagam

ரூ.30,000 கோடி மதிப்புள்ள சோனா குழுமம்: கொலை செய்யப்பட்டாரா சஞ்சய் கபூர்? கடிதத்தால் வெடித்த சர்ச்சை! News Lankasri
