புதுவருடத்தில் அமெரிக்கர்களை திகிலடையச் செய்த தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ் பொறுப்பு
2025 புதுவருடத்தன்று, அமெரிக்காவின் நியூ ஓர்லியன்ஸில் நடந்த தாக்குதலில் பலரின் ஈடுபாடு இருக்கலாம் என்று அமெரிக்க அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
இந்த தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டதோடு பலர் காயமடைந்துள்ளனர்.
முன்னதாக, நகரின் பிரெஞ்சு குடியிருப்பில் அதிக கூட்டத்திற்குள் வேகமாக தமது வாகனத்தை செலுத்தி பலரின் உயிர் காவுகொள்ளப்படுவதற்கு காரணமாக இருந்தவர், டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க முன்னாள் இராணுவ வீரரான சம்சுத்-தின் ஜப்பார் என அடையாளம் காணப்பட்டிருந்தார்.
ஐஎஸ்ஐஎஸ் கொடி
அவர் தாக்குதலுக்கு பயன்படுத்திய வாகனம், கடந்த நவம்பர் மாதம் 16ஆம் திகதியன்று, டெக்ஸாஸில் இருந்து, எல்லையைத் தாண்டி ஓர்லியன்ஸஸுக்குள் வந்ததாக கூறப்படுகிறது.
அந்த வாகனத்தை ஜப்பார் செலுத்தி வந்தாரா என்பது கண்டறியப்படவில்லை. எனினும், அவர் குறித்த தாக்குதலின் பின்னர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார்.

இந்தநிலையில், தாக்குதல் நடத்தியவர் ஐஎஸ்ஐஎஸ் என்ற குழுவால் ஈர்க்கப்பட்டவர் என்று ஜனாதிபதி ஜோ பைடன் கூறியுள்ளார்.
அதேநேரம், தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனத்தில் ஐஎஸ்ஐஎஸ் கொடி கண்டுபிடிக்கப்பட்டதாக எஃப்.பி.ஐ கூறியுள்ளது.
விசாரணை
இதற்கிடையில், சம்பவத்தில் கொல்லப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் முன்னாள் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக கால்பந்து வீரரும், செவிலியர் ஒருவரும் அடங்குகின்றனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்று சில மணிநேரங்களுக்குப் பின்னர், லோஸ் வேகாஸில் உள்ள டிரம்ப் ஹோட்டலுக்கு வெளியே வாகனம் ஒன்று வெடித்துள்ளது.
இந்தநிலையில், குறித்த இரண்டு தாக்குல்களுக்கும் தொடர்புகள் உள்ளனவா என்பதை கண்டறியும் முயற்சிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri