செல்பி எடுக்க முயன்ற இளைஞனுக்கு நேர்ந்த கதி
வவுனியா - கல்லாறுப் பாலத்தில் செல்பி எடுக்க முற்பட்ட இளைஞர் ஒருவர் புகையிரதத்தில் மோதுண்டு பரிதாபமாக மரணமடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று (05) காலை 8.30 மணியளவில் மதவாச்சி மன்னார் வீதி கல்லாறுப்பாலத்தில் இடம்பெற்றது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மன்னார் - முருங்கன் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கி மோட்டார் சைக்கிளில் வருகைதந்த இரு இளைஞர்கள், செட்டிகுளம் கல்லாற்றுப் பாலத்தில் ஏறி தங்களது தொலைபேசியில் செல்பி எடுக்க முற்பட்டுள்ளனர்.
இதன்போது மன்னார் பியர் பகுதியில் இருந்து கொழும்பு நோக்கிச்சென்றுகொண்டிருந்த புகையிரதத்தில் மோதி விபத்திற்குள்ளாகினர்.
விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன், மற்றைய ஒருவர் பாலத்தின் கீழே குதித்து உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவத்தில் முருங்கன் - பரியாரிகண்டல் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் கண்ணா வயது 19 என்ற நபரே மரணமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பாக பொலிசார் விசாரணைகளை
முன்னெடுத்து வருகின்றனர்.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் கார்த்திகை உற்சவம்





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 2 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
