திருகோணமலையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி
திருகோணமலை- தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 98ஆம் கட்டை சந்தியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்து இன்று (08) மாலை இடம் பெற்றுள்ளது.
மூதூரை சேர்ந்த 55 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.
மேலதிக விசாரணை
விபத்து தொடர்பில் தெரியவருவதாவது, நபரொருவர் பொது போக்குவரத்து பேருந்தில் இருந்து இறங்கி மஞ்சள் கடவையை கடக்கும் போது வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதியதில் குறித்த சம்பவம் இடம் பெற்றுள்ளதாக தெரியவருகிறது.

உயிரிழந்தவரின் சடலம் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் காயங்களுக்குள்ளாகி மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலகாமம் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
ரஷ்ய பாதுகாப்புத்துறை அதிகாரிக்கு இணையத்தில் கிடைத்த தோழி: பின்னர் காத்திருந்த அதிர்ச்சி News Lankasri
சீரியல் நடிகர் வெற்றி வசந்த், வைஷு வீட்டில் ஏற்பட்ட உயிரிழப்பு... சோகத்தில் குடும்பம், பிரபலம் பதிவு Cineulagam
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan