லிபியாவை தாக்கிய கோர புயல்: இரண்டாயிரம் பேர் பலி
கிழக்கு லிபியாவில் டேனியல் புயலால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
கிழக்கு லிபியாவின் டேர்னா நகர் அதிகளவான பாதிப்பை எதிர்கொண்டுள்ள நிலையில், அந்த பகுதி அபாய வலையமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் போக்குவரத்து, மின்சாரம் என்பன தடைப்பட்டிருப்பதால், மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
டெர்மா நகரில் மாத்திரம் இதுவரையில், ஆயிரத்து 200க்கும் அதிகமானோர், காயமடைந்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
மத்திய தரைக்கடல் பகுதியில் லிபியா அமைந்துள்ளதால் புயலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள அந்நாட்டின் டெர்னா, பெடா, சுசா உள்பட பல்வேறு நகரங்களை புயல் அதிகளவில் தாக்கியுள்ளது.
புயல், கனமழை, வெள்ளப்பெருக்கில் இதுவரை 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கனமழை, வெள்ளப்பெருக்கில் பலர் மாயமாகியுள்ளனர்.
மேலும், ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் பாட்டி யார் தெரியுமா.. ஒரு காலத்தில் யாருடன் நடித்திருக்கிறார் பாருங்க Cineulagam
