உலகை உலுக்கிய மொரொக்கோ நிலநடுக்கம்: அதிகரிக்கும் பலி எண்ணிக்கை(Video)
உலகை சோகத்தில் ஆழ்த்தியுள்ள மொரொக்கோ நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2122ஐ தாண்டியுள்ளது.
இந்நிலையில் காயப்பட்டவர்களின் எண்ணிக்கை 2500 வரை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரொக்கோவில் 120 ஆண்டுகளுக்கு பின்னர் ஏற்பட்டுள்ள பாரிய நிலநடுக்கமாக இது பதிவாகியுள்ள நிலையில் மலைப்பாங்கான பிரதேசங்களேயே அதிகளவில் உயிர்பலிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள வீதிகள் சேதமடைந்துள்ளமையினால் மீட்பு பணிகள் தாமதமடைந்துள்ளது.
இதன்காரணமாக உயிர்ப்பலிகள் அதிகரித்து வரவதாக தெரிவித்துள்ளனர். மற்றும் மீட்பு பணியாளர்களின் தாமதத்தினால் பொதுமக்கள் தாமே இடிபாடுகளிலிருந்து தமது உறவுகளை மீட்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதேவேளை மீட்பு பணிகள் தாமதமடைவதனால் அனைத்துலக அவசர கால பணியாளர்கள் மீட்பு பணியில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு இலங்கையிலும் உலக தரப்பிலும் இடம்பெற்ற முக்கிய விடயங்களை தொகுத்து வருகிறது இன்றைய செய்தி வீச்சு...
 
    
     
    
     
    
     
    
     
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                             
         
     
     
 
 
 
        
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        