எங்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று விடுங்கள்! யாழில் வீதிக்கு இறங்கி கதறியழுத உறவுகள்
தமது உறவுகளை மீட்டுத் தருமாறு கோரி காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் இன்று யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப் போராட்டமொன்றை மேற்கொண்டுள்ளனர்.
நல்லூர் நல்லை ஆதீனம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, "எங்கள் பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்", "இனவாதத்தைக் கக்காதீர்கள்", "எங்கள் பிள்ளைகள் எங்களுக்கு வேண்டும்", "தமிழர்களுக்கு ஒரு நீதி; சிங்களவர்களுக்கு ஒரு நீதியா?", "மனிதாபிமானத்துடன் எமது பிள்ளைகளை விடுவியுங்கள்", "இனியும் காலம் தாழ்த்தாது பிள்ளைகளை எங்களிடம் ஒப்படையுங்கள்", "எமது உறவுகள் விடுதலை செய்யப்படும் வரை நாம் தொடர்ந்து போராடுவோம்" என பல்வேறு கோஷங்களை எழுப்பி கதறியழுதுள்ளனர்.
இதன்போது அவர்கள் மேலும் கூறுகையில், "காணாமல்போன தமது உறவுகளைத் தேடிய எத்தனையோ தாய், தந்தையர் மற்றும் சொந்தங்கள் உயிரிழந்திருக்கின்ற நிலையிலும் போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. இவ்வாறு ஒருவர் ஒருவராக சாவதை விட எங்களை ஒட்டு மொத்தமாகக் கொன்று விடுங்கள்" என குறிப்பிட்டுள்ளனர்.
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri