இரணைமடு குளத்தில் ஏற்பட்ட தொழில் நுட்ப கோளாறு சீர் செய்யப்பட்டுள்ளது
கிளிநொச்சி - இரணைமடு குளத்தில் இருந்து நீர்ப்பாசனத்திற்கான நீர் திறந்துவிடப்படும் கதவு பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு இன்று உடனடியாக சீர் செய்யப்பட்டு இரணைமடு குளத்தின் நீர் விவசாயிகளுக்கு போதியளவு திறந்து விடப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்ப்பாசன குளமான இரணைமடு குளத்தின் கீழ் இம்முறை 17ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட உள்ள நிலையில், இதற்காக குளத்து நீர் திறந்து விடப்பட்டு விவசாயிகள் பயிர்செய்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்றைய தினம் இரணைமடு குளத்தின் நீர் திறந்துவிடப்படும் கதவு பகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக குளத்திலிருந்து மேற்கொள்ளப்பட்ட நீர் விநியோகம் சற்று குறைவாக காணப்பட்டது.
இந்த நிலையில் கடந்த சனி,ஞாயிறு அரச விடுமுறை நாட்களாக உள்ள போதும் நீர்ப்பாசன பொறியியலாளர் மற்றும் திணைக்கள அதிகாரிகள் உத்தியோகத்தர்கள் தொடர்ச்சியாக தமது பணிகளை மேற்கொண்டு நீர் விநியோகத்தை சீர் செய்துள்ளனர்.
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan